தமிழ்

தமிழின் பாரம் பரியம்...
கிறிஸ்துவுக்கும் முன்னால் மூன்றாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட தமிழ் எழுத்துருக்களும்  நாம் இப்போது எழுதும் நம் தமிழ் எழுத்துருக்கள் எப்படி இருந்தன என பார்த்தபோது மிகவும் ஆச்சரியமாக இருந்தது. இந்த எழுத்துருக்களின் பயணமே பல வரலாற்றுக் கதைகளைச்சொல்லும் போலிருக்கின்றது.

இறங்குமுக இலக்கங்கள்

1 - ஒன்று
3/4 - முக்கால்
1/2 - அரை கால்
1/4 - கால்
1/5 - நாலுமா
3/16 - மூன்று வீசம்
3/20 - மூன்றுமா
1/8 - அரைக்கால்
1/10 - இருமா
1/16 - மாகாணி(வீசம்;)
1/20 - ஒருமா
3/64 - முக்கால்வீசம்
3/80 - முக்காணி
1/32 - அரைவீசம்
1/40 - அரைமா
1/64 - கால் வீசம்
1/80 - காணி
3/320 - அரைக்காணி முந்திரி
1/160 - அரைக்காணி
1/320 - முந்திரி
1/102400 - கீழ்முந்திரி
1/2150400 - இம்மி
1/23654400 - மும்மி
1/165580800 - அணு
1/1490227200 - குணம்
1/7451136000 - பந்தம்
1/44706816000 - பாகம்
1/312947712000 - விந்தம்
1/5320111104000 - நாகவிந்தம்
1/74481555456000 - சிந்தை
1/489631109120000 - கதிர்முனை
1/9585244364800000 - குரல்வளைப்படி
1/575114661888000000 - வெள்ளம்
1/57511466188800000000 - நுண்மணல்
1/2323824530227200000000 - தேர்த்துகள்அளவைகள்
நீட்டலளவு

10 கோன் -                                              1 நுண்ணணு
10 நுண்ணணு -                                      1 அணு
8 அணு -                                                1 கதிர்த்துகள்
8 கதிர்த்துகள் -                                      1 துசும்பு
8 துசும்பு -                                              1 மயிர்நுணி
8 மயிர்நுணி -                                        1 நுண்மணல்
8 நுண்மணல் -                                      1 சிறுகடுகு
8 சிறுகடுகு -                                         1 எள்
8 எள் -                                                  1 நெல்
8 நெல் -                                                1 விரல்
12 விரல் -                                             1 சாண்
2 சாண் -                                               1 முழம்
4 முழம் -                                             1 பாகம்
6000 பாகம் -                                        1 காதம்(1200 கெசம்;)
4 காதம் -                                             1 யோசனை

பொன்நிறுத்தல்

4 நெல் எடை -                                      1 குன்றிமணி
2 குன்றிமணி -                                     1 மஞ்சாடி
2 மஞ்சாடி -                                          1 பணவெடை
5 பணவெடை -                                    1 கழஞ்சு
8 பணவெடை -                                    1 வராகனெடை
4 கழஞ்சு -                                           1 கஃசு
4 கஃசு -                                               1 பலம்

பண்டங்கள் நிறுத்தல்

32 குன்றிமணி -                                  1 வராகனெடை
10 வராகனெடை -                              1 பலம்
40 பலம் -                                            1 வீசை
6 வீசை -                                             1 தூலாம்
8 வீசை -                                             1 மணங்கு
20 மணங்கு -                                      1 பாரம்

முகத்தல் அளவு

5 செவிடு -                                        1 ஆழாக்கு
2 ஆழாக்கு -                                     1 உழக்கு
2 உழக்கு -                                        1 உரி
2 உரி -                                              1 படி
8 படி -                                               1 மரக்கால்
2 குறுணி -                                       1 பதக்கு
2 பதக்கு -                                         1 தூணி

பெய்தல் அளவு

300 நெல் -                                     1 செவிடு
5 செவிடு -                                    1 ஆழாக்கு
2 ஆழாக்கு -                                 1 உழக்கு
2 உழக்கு -                                    1 உரி
2 உரி -                                          1 படி
8 படி -                                           1 மரக்கால்
2 குறுணி -                                   1 பதக்கு
2 பதக்கு -                                     1 தூணி
5 மரக்கால் -                                1 பறை
80 பறை -                                     1 கரிசை
48 96 படி -                                    1 கலம்அதிக எண்ணின் பெயர் கொண்ட மொழி...

 1. 1 = ஒன்று                                                            - One
 2. 10 = பத்து                                                              - Ten
 3. 100 = நூறு                                                             - Hundred
 4. 1000 = ஆயிரம்                                                    - Thousand
 5. 10 000 = பத்தாயிரம்                                          - Ten thousand
 6. 100 000 = நூறாயிரம்                                         - Hundred thousand
 7. 1000 000 = பத்து நூறாயிரம்                            - One million
 8. 10 000 000 = கோடி                                               - Ten million
 9. 100 000 000 = அற்புதம்                                        - Hundred million
 10. 1000 000 000 = நிகற்புதம்                                   - One billion
 11. 10 000 000 000 = கும்பம்                                       - Ten billion
 12. 100 000 000 000 = கணம்                                       - Hundred billion
 13. 1000 000 000 000 = கற்பம்                                    - One trillion
 14. 10 000 000 000 000 = நிகற்பம்                             - Ten trillion
 15. 100 000 000 000 000 = பதுமம்                               - Hundred trillion
 16. 1000 000 000 000 000 = சங்கம்                             - One zillion
 17. 10 000 000 000 000 000 = வெள்ளம்                     - Ten zillion
 18. 100 000 000 000 000 000 = அந்நியம்                    - Hundred zillion
 19. 1000 000 000 000 000 000 = அற்ட்டம்                  - ????????????
 20. 10 000 000 000 000 000 000 = பறற்ட்டம்             - ????????????
 21. 100 000 000 000 000 000 000 = பூறியம்                  - ????????????
 22. 1000 000 000 000 000 000 000 = முக்கோடி          - ????????????
 23. 10 000 000 000 000 000 000 000 = மகாயுகம்        - ????????????
 உலகிலே அதி கூடிய எண்ணிற்கு பெயர் உள்ள ஒரே மொழி தமிழ் மொழி ஆகும். 
குறிப்பு:- தற்பொழுது இலட்சம் என்பதற்கு தமிழ் மொழியில் இலக்கம் என அழைக்கப்படுக்கிறது. இலக்கம் என்றால் எண் என்பது தவறானது.தமிழ் எண் பணத்தாள்.

தமிழீழம் மலருமாயின் எம் நாட்டிலும் தமிழில் உள்ள பணத்தாள் மற்றும் அனைத்தும் தமிழைக் கூறும் வகையில் அமையும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. ஆனாலும் எமக்கென்று ஒரு நாடு இல்லாத போதில் தமிழர்கள் பல நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் பலர் தமிழை வளர்பதற்க்காக வெளிநாடுகளிலும் தமிழீழத்திலும் பெரும் பாடு படுகின்றனர். அவ்வாறான ஒரு முயற்சியில் கிடைக்கபெற்ற தமிழர் பெருமை கொள்ளக்கூடிய ஒன்று மொரிசியசு என்ற நாட்டில் உபயோகத்தில் உள்ள பணத் தாள்களில் தமிழ் எழுத்துக்களும் தமிழ் இலக்கங்களும் அமையப் பெற்றுள்ளது. நீங்கள் இதுவரை பார்த்திராத தமிழ் எண்கள் உள்ள நாணயத் தாள்கள். 


இந் நாட்டில் 30000 தமிழர்களே வாழ்கின்றனர். அந் நாடு அவர்களுக்கான உரிமையை அளித்துள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

தமிழ் தழைக்கும் காலம் தூரம் இல்லை. தமிழன் எழும் நாள் தொலைவுமில்லை.

உலகில் அதிக சொற்கள் கொண்ட மொழி

இன்றைய கால கட்டத்தில் தமிழ் மொழியும் சரி தமிழர் பற்றிய அர்ரச்சியும் சரி வளர்ந்து கொண்டே வருகின்ற தருணம் என்றே கூறலாம். 
உலகில் பலதரப் பட்ட மக்களிடம் காணப்படும் ஒரு வியப்பான கேள்வி என்பது உலகில் அதிக சொற்களை உடைய மொழி எது? ஆங்கிலமா என்று ஒரு நம்பிக்கையுடன் கேட்கின்றனர். ஆனால் இது பற்றி நடத்திய ஆய்வு கூறியதாவது இல்லை என்பதே. ஆங்கிலம் இல்லையானால் எந்த மொழியாக இருக்கும் என்று பலர் சிந்தித்த தருணம் ஆக்ஸ்போர்டு (Oxford ) அகர முதலி இந்தக் கேள்வியை தாமும் கொண்டிருந்த காரணத்தால் இதில் ஈடுபாட்டுடன் செயற்ப்பட்டனர். பின்னர் இவர்கள் அதற்க்கான பதிலை விடையை வெளியுட்டனர். 20 தொகுதிகளைக் கொண்ட ஆக்ஸ்போர்டு அகர முதலியில் ௧௭௧,௪௭௬ (171 , 476 ) சொற்கள் உள்ளன. ஆனால் மொத்தமாக ௨௫௦,௦௦௦ (250 , 000 ) சொற்களுக்கு குறையாமல் இருக்குமெனத் தெருவித்தார்கள்.சொற்பொருள்களைக் கணக்கில் கொண்டால் அவை முக்கால் மில்லியனை அதாவது 750 000 வரை இருக்கலாம் என்று மதிப்பிட்டுள்ளனர். 


ஆனால் எமது தாய் மொழியான தமிழ் மொழியையும் ஆராட்சி செய்த போது, தமிழ் மொழியின் 12 ,000 பக்கங்கள் கொண்ட அகர முதலியில் ஏறத்தாள ௫௦௦,௦௦௦ ( 500 ;000 ) தமிழ் சொற்கள் உள்ளன என்ற பதிலை அளித்துள்ளனர். இவற்றுக்கு சொற்பொருள்களைக் கணக்கில் கொண்டால் அவை ௧ ௦௦௦ ௦௦௦ (1 000 000 ) ஐ விட அதிகம் என்றே கருதலாம்.
இந்த அகர முதலியில் மொத்தமாக ௩௧ (31 )தொகுதிகள் உள்ளன. இவற்றை ௩௭ (37 ) ஆண்டுகளாக உழைத்து உருவாக்கப் பட்ட அகர முதலித் திட்டம் தமிழ் சொற்பிறப்பியல் அகராதி திட்டம்  (Tamil etymological Dictionary project)  அண்மையில் முடிவடைந்துள்ளது. இத்திட்டமானது பாவாணரால் தொடங்கப்பட்டு பேராசிரியர் இரா. மதிவாணன் என்பவரின் தலைமையில் முழுமை பெற்றுள்ளது.

முதல் தடவையாக தமிழ் மொழி ஒக்ஸ்போர்ட் என்ற ஆங்கில அகராதியை உருவாக்கிய நிறுவனம் எமது தமிழ் மொழியை தமது ஆராய்ச்சிக்கு உட்படுத்தியுள்ளமை நாம் பெருமை கொள்ளக் கூடிய ஒரு சந்தர்ப்பமாகவே அமைந்துள்ளது. இவ்வாறு நாம் அறியாத பல தகவல்கள் எம் தமிழ் மொழியில் உண்டு. 

"தமிழ் மொழியை அழியாது காப்போமாக"

No comments:

Post a Comment