பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு உறவினர்களுக்கு அனுப்புவதற்கு உபயோகியுங்கள்...
இதை செய்யிறதுக்கு கொஞ்சம் கஷ்டப்பட்டு முயற்சி செய்திருக்கிறன். கருத்தையும் எழுதிவிட்டு செல்லுங்களேன்..
ஒரு உயிர் பிரிந்து விட்டபோது அல்லது ஒரு பொருளை நாம் தொலைத்த பின்பு தான் அதன் அருமை மனிதராகிய நமக்குப் புரிகிறது. அது போல் என்று நாம் எம் அன்னையைப் பிரிகிறோமோ அன்று தான் அன்னையின் அருமையை உணருகிறோம். எம்மைப் பெற்றதில் இருந்து நாம் பக்குவ நிலையை அடையும் வரை "கோழி அடை காப்பது" போல எம்மைக் காப்பாள். அவ்வாறு தாயவள் நமக்காக வாழுகின்ற போது அத் தாய்க்கு நாம் தெரியாமல் சில தவறுகளை செய்கிறோம் தெரிந்தே பல தவறுகளைச் செய்கிறோம். அப்பொழுது கூட பொறுமையாக விளங்கப்படுத்துகிறாள் அதில் உள்ள நன்மை தீமைகளை. சில நேரங்களில் காதில் வாங்கிக் கொள்கிறோம் பல நேரங்களில் கேட்பதில்லை. தாய் தனக்காக ஒரு போதும் இறைவனிடம் வேண்ட மாட்டாள். தன் பிள்ளை நல்லா இருக்க வேண்டும் எல்லா நன்மையும் பிள்ளைக்கு சேர வேண்டும் என்றும் சில சமயங்களில் தன் ஆயுளையும் சேர்த்து என் பிள்ளைக்கு கொடு இறைவா என்று கூட வேண்டுகிறாள். அது பிள்ளையாகிய நமக்கு அவளுடன் சேர்ந்திருக்கும் போது தெரிவதும் இல்லை புரிவதும் இல்லை. நமக்கு பல நண்பர்கள் வெளியே உருவாகிறார்கள் ஆனால் என்றும் நாம் ஒரு தாயை நண்பராகப் பார்ப்பதில்லை காரணம் ஒரு தாயிடம் எப்படி எல்லாத்தையும் சொல்லுவது என்ற பயம். நாம் எமது பிரச்சனைகளை நண்பர்களை நம்பிக் கதைகிறோமே ஆனால் பெற்ற தாயவளை நம்ப மறுக்கிறோமே காரணம் ஏனோ?.