
நீங்கள் காண்பவர்களில் மனம் குன்றியவர்கள் இருந்தால் அவர்களை உங்கள் அருகே வைத்து அன்பையும் பாசத்தையும் காட்டுங்கள் ஒரு வாரம் அல்ல ஒரு நாளில் அவர்களின் மனதில் ஏற்படும் மாறுதலை உணருவீர்கள். நீங்கள் இதில் வெற்றி அடைந்து விட்டீர்களானால் அதில் அடையும் இன்பத்தை வேறு எதிலும் அடைய மாட்டீர்கள்.
ஏழை என்றும் ஏழை அல்ல அதை புரிந்து கொள் மனிதா!
நீ உதவுவதால் உன் மிகப் பெரிய சொத்தாகிய நிம்மதி உன்னை வந்து சேரும்.
ஏழை உன்னை மதிப்பதாக இருந்தால் அது உன் மீது உள்ள பயம் என்று நினையாதே!
அதுவே உன்னை ஒருநாள் மனம் வருந்தச் செய்துவிடும்.
ஏழை வாடினாலும் சிரிப்பார்கள் காரணம் நிம்மதி அவர்களிடம் இருக்கும்
பணம் உள்ள நாம் நிம்மதியை பணத்துடன் விட்டு விட்டு அலுத்து கொண்டிருப்போம்.
ஏழைக்கு உதவி செய் ஆனால் செய்வது போன்று நடிக்காதே
அந்தப் பாவம் உன்னை ஒன்றும் செய்யாது உன் வம்சத்தையே பழி வாங்கிவிடும்.
ஏழைக்கு உதவு ஏழ்மையை ஒழித்துவிடு
பூமாதேவி புன்னகைப்பாள்..
உங்கள் தளவாடி ( ம.தினேஷ்)