v பெயர்ச் சொற்கள்.ஒரு பொருளின் அல்லது உயிரின் பெயரைக் குறிப்பிடல் பெயர் சொல்லாகும். அத்துடன் எம் கண்ணால் பார்க்கக் கூடிய ஒரு பொருளின் வடிவம், குணம், பண்பு என்பவற்றைக் கூறல் பெயர்ச் சொல்லாகும்.
v பெயர்ச்சொற்கள் 6 வகைப்படும். பொருட்ப்பெயர் :- இருக்கை, மேசை, மாடு , காந்தன்
காலப்பெயர் :- நேரம் , மாரி, கோடை
இடப்பெயர் :- பாடசாலை, சந்தை( அங்காடி), வீடு
சினைப்பெயர் :- ஒரு பொருளின் பகுதியைக் குறிப்பிடும் பெயர் (பூ
:- இதழ் , காம்பு , இலை)
குணப்பெயர் :- கோபம் , அன்பு , மென்மை, சாந்தம்
தொழிற்பெயர் :- விவசாயம் , பொரித்தல், கூட்டல், நடத்தல்
(தொழிற்பெயர் ஒரு போதும் காலம் காட்டாது)
Ø ஆகு பெயர்கள்.ஒரு பொருளின் இயற்ப்பெயர் அது இன்னொன்றாக ஆகி வருதல் ஆகு பெயர்களாகும்.
உதாரணம்:- தாமரை குளத்தில் வளர்கிறது.
தாமரை என்பது கொடியைக் குறிக்கும் ஆனால் இங்கு
உதாரணம்:- தாமரை குளத்தில் வளர்கிறது.
தாமரை என்பது கொடியைக் குறிக்கும் ஆனால் இங்கு
தாமரைக் பூவைக் குறிப்பதன் மூலம் ஆகி வருகிறது.
ஆகு பெயர்களின் பிரிவுகள்
1. பொருளாகுபெயர் :- தாமரை ( கொடியின் பெயர் அதன் பகுதியாகிய
பூவிற்க்குக் குறிக்கப்பட்டுள்ளது)
2. சினையாகுபெயர் :- வெற்றிலை நட்டான் ( ஒரு மரத்தின் பகுதியின்
அதாவது இலையின் பெயர் இங்கு மரத்துக்குப்
பெயர் ஆகி வந்துள்ளது)
3. குணவாகுபெயர் :- வீட்டிற்கு வெள்ளையடித்தோம் ( வெள்ளை என்பது
நிறத்தின் பெயர் இங்கு நிறபூச்சைக்
குறிப்பிடுகிறது. பொருளின் குணம் பொருளாகி
வருதல்)
4. காலவாகுபெயர் :- கார்த்திகைப் பூ ( காந்தள் பூவின் பெயர். அது
கார்த்திகையில் பூப்பதனால் அந்த மாதத்தின் பெயர்
ஆகி வந்துள்ளது)
5. இடவாகுபெயர் :- கைப்பந்தாட்டத்தில் யாழ்ப்பாணம் வென்றது.
5. இடவாகுபெயர் :- கைப்பந்தாட்டத்தில் யாழ்ப்பாணம் வென்றது.
(யாழ்ப்பாணம் என்பது ஒரு இடத்தின் பெயர் –
இங்கு யாழ்ப்பாணம் ஒரு குழுவிற்கு பெயராகி
வந்துள்ளது )
6. தொழிலாகுபெயர் :- தைத்திருநாள் அன்று பொங்கல் உண்டார்கள். ( இங்கு
பொங்கல் என்பது ஒரு தொழில் - தொழில்
உணவின் பெயராகி வந்துள்ளது)
No comments:
Post a Comment