ஒரு ரூபா நாணயக் குற்றி. 2006 ஆம் ஆண்டு பொன்னிறப் பூச்சுடன் வெளியிடப்பட்டது.
இரண்டு ரூபாய்க் குற்றி. 2004 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
ஐந்து ரூபாய்க் குற்றி. 2006 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இதன் பின்னால் ஒரு வேடிக்கையான சிறுகதை 2010 வெளி வந்தது. அதாவது இக் குறியினை உருக்கி பொன் ஆபரணங்களுக்குப் பதிலாக பாவிக்கப் பட்டுள்ளது காரணம் இக் குற்றி பொன் நிறத்தால் ஆக்கப்பட்டதனால்.
ஐந்து ரூபாய்க் குற்றி. இது 1999 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இலங்கை மட்டைப் பந்து அணியின் வெற்றி காரணமாக இவ்வாறு வெளியிடப்பட்டது.
பத்து ரூபாய் நாணயக் குற்றி. 1998 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. சிறப்பு இலங்கையின் 50 ஆவது சுதந்திர தினத்தின் போது வெளியிடப்பட்டது.
இரண்டு ரூபாய்க் குற்றி. 1981 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இலங்கையில் மிகப் பெரிய ஆற்றின் படம் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
ஒரு சதக் குற்றி. 1994 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இதன் பின் புறத்தில் இலங்கையின் இலட்சினை பொறிக்கப்பட்டுள்ளது.
இரண்டு சதக் குற்றி. 1975 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. பின் புறத்தில் இலங்கையின் இலட்ச்சனை பொறிக்கப்பட்டுள்ளது.
ஐந்து சதக் குற்றி. 1975 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. சதுர வடிவமுடையது. பின் புறத்தில் இலங்கையின் இலட்சினை பொறிக்கப்பட்டுள்ளது.
இருபத்தைந்து சதக் குற்றி. 2006 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. பின் புறத்தில் இலங்கை இலச்சினை பொறிக்கப்பட்டுள்ளது.
ஐம்பது சதக் குற்றி. 2001 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. பின் புறத்தில் இலங்கை இலட்சினை பொறிக்கப்பட்டுள்ளது.