Thursday, 10 November 2011

உலகத்தை மாறுதலுக்கு உள்ளாகிய சில முக்கிய புகைப்படங்கள்.* 1957 *

1957 ஆம் ஆண்டு அமெரிக்காவில் ஹாரி ஹார்டிங் உயர்நிலை பள்ளியில் டோரதி (Dorothy ) என்ற கருப்பு இனத்து பெண் முதன் முதாலாக பாடசாலையில் இணைந்தார்.  4 நாட்கள் அவளுக்கு வழங்கப்பட்ட தொந்தரவால். அப் பெண்ணால் நீண்ட நாட்கள் தொடர முடியாதிருந்தது.


*1960 *

தை மாதம் 12 ஆம் திகதி 1960 ஆம் ஆண்டு 2 ஆவது முன்னால் ஜப்பானின் சோசலிசக் கட்சித் தலைவர் அசனுமா (Asanuma ) என்பவர் எதிர் கட்சி மாணவர் ஒருவனால் கொலை செய்யப்பட்டார்.


* 1962 *


1962 ஆம் ஆண்டு தென் அமெரிக்காவில் ஒரு படைவீரன் குறிபார்த்து சுடும் துப்பாக்கியினால் சுடப்பட்டு இறக்கும் தருணத்தில் அவ்விடத்தில் நின்ற ஒரு பாதிரியாரின் செயற்ப்பாடு.


* 1963 *


1963. ஆம் ஆண்டு திச் குவாங் டுக் (Thich Quang Duc ) என்ற புத்த பிக்கு ஒருவரால் , தெற்கு வியட்நாமில் முடுக்கிவிடப்பட்ட பிக்குகளுக்கு எதிரான அரசாங்கத்தின் சித்திரவதை கொள்கையை எதிர்த்து தன்னை தானே தீக்கிரையாக்கிக் கொண்டார். அத்துடன் இவர் தீயால் எரிந்த போது எந்த வித ஒரு ஒலியையோ அல்லது அசைவையோ கொண்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

* 1965 *


1965 ஆம் ஆண்டு தென் வியட்நாமில் ஒரு தாய் தனது பிள்ளைகளுடன் அமெரிக்காவின் குண்டு விச்சுக்கு பயந்து ஆற்றினுள் குத்தித்து தப்பிக்க முயற்சித்தார்.


* 1966 *


1966 ஆம் ஆண்டு நடைபெற்ற போரின் போது இறந்த வியட்நாம் சிப்பாய் ஒருவரை ஐக்கிய அமெரிக்க படை வீரர்கள் அவரை பீரங்கி வாகனத்தின் பின்னால் இழுத்துச் சென்றனர்.


* 1972 *

1972 ஆம் ஆண்டு தென் வியட்நாம் இல் அமெரிக்க விமானங்கள் தற்செயலாக பிறிதொரு நகரத்தில் குண்டு போட்டதானால் ஏற்ப்பட்ட தீ விபத்தில் இருந்ந்து பெற்றோரை இழந்த ஒரு சிறுமி தெருவழியே ஓடும் இப் புகைப்படம் வெளியிடப்பட்டதும் வியட்நாம் போர் நிறுத்தப் பட்டது.

* 1981 *


மாசி மாதம் 23 ஆம் திகதி 1981 ஆம் ஆண்டு இராணுவப் பொலிஸ் அதிகாரி கொலோனேல் மோலினா என்பவர் ஸ்பெயின் நாட்டின் பாராளுமன்றக் கட்டிடத்தை கைப்பற்றினார். இப் புகைப்படத்தை புகைப்படக் கலைஞர் தனது பாதணியில் மறைத்து வைத்து எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.


* 1982 *

1982 ஆம் ஆண்டில் பாலஸ்தீன அகதிகள் பெய்ரூட், லெபனான் (Beirut, Lebanon ) ஆகிய இடங்களில் கொலை செய்யப்பட்டனர்.


* 1987 *

1987 ஆம் ஆண்டு தென் கொரியாவில் பொதுத் தேர்தல் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவத்தாதாக கைது செய்யப்பட்ட மகனைத் திரும்ப தன்னிடம் ஒப்படைக்குமாறு கேட்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படம்.

* 1992 *

1992 ஆம் ஆண்டு சோமாலிய நாட்டில் பசியால் இறந்த தன குழந்தையை தாய் கையில் தாங்கியபடி இருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம்.

* 2002 *

2002 ஆம் ஆண்டில் ஏற்ப்பட்ட பூமியதிர்ச்சியால் இறந்தவர்களை அந்தநாட்டு இராணுவத்தினரும் கிராம மக்களும் சேர்ந்து அவர்களுக்கு கலரை அமைத்தனர் அச் சமயத்தில் அங்கே ஒரு சிறுவன் தனது தந்தையின் நீலகாற்ச்சட்டையை கையில் பிடித்தவண்ண இருக்கும் காட்சி.


*

2003 ஆம் ஆண்டு ஈராக் போர்க் கைதி ஒருவர் தனது பிள்ளையை சமாதானப் படுத்தும் போது எடுக்கப்பட்ட காட்சி.

Wednesday, 8 June 2011

குடும்ப மரம் ( Family Tree )


இன்றைய காலகட்டத்தில் கூட்டுக் குடும்பம் என்பது மிக அரிதாகி தனிக்குடும்பமே 99 % காணப்படுக்கின்றது. இவ்வாறு இருக்கின்ற பொழுது எம்மில் அநேகருக்கு எமது குடும்ப அங்கத்தவரில் சிலரையோ அல்லது பலரையோ அறிந்திருக்க மாட்டோம் நாம் புதிய இடத்திற்கோ , திருவிழாவிற்கோ அல்லது நிகழ்வொன்றுக்கோ செல்லும் போது அங்கு வருபவர்கள் "நீங்க அவான்ட மகளோ அல்லது நீங்க அவற்ற மகனோ" என்று கேட்க்கும் போது எமக்கு கேள்வி கேட்பவர் யார் என்று தெரியாததனால் சில சமயங்களில் அவர்களின் முகத்தை முறிப்பது போன்று செயற்ப்பட சந்தர்ப்பம் அதிகம் உருவாகின்றது. பின்னர் தான் எமது பெற்றோரிடமோ யாரிடமோ அவர்களைப்பற்றி அறிந்து கொள்கிறோம். இத்தகைய ஒரு பிரச்சனையைப் போக்க இணையத்தளத்தில் இலவசமாக உங்கள் குடுப்பம் பற்றிய தகவலையும் உங்கள் குடும்ப அங்கத்தவர்களையும் ஒரு மரம் போல் உருவாக்க தக்க இணையம் உங்களுக்காக.
இந்த இணையத்தளத்திற்கு செல்வதற்கு கிழே காணப்படும் நிழம்பு ( Photo ) ஐ சொடுக்கவும் 


சொடுக்கியதும் மேல காட்டப் பட்டவாறு ஒரு இணையத்தளம் உங்களுக்கு உருவாகும். பின்னர் கிழே காட்டப்பட்டுள்ள நிழம்பு ( Photo ) வில் உள்ளதை போன்று உங்கள் தகவலை அளித்து START MY FAMILY TREE ! என்பதனைச் சொடுக்கி இலவசக் கணக்கை ஆரம்பிக்கவும்.¨


இதில் START MY FAMILY TREE ! என்ற சொடுக்கியை சொடுக்கியதும் கிழே காட்டப்பட்டது போன்ற ஒரு பகுதி உங்களுக்கு காண்பிக்கப்படும். அதில் நீங்கள் உள்நுழைவதற்கு குறிப்பிட்ட முளுபெயருடன் தோன்றும்.


பின்னர் உங்கள் பெயரின் கீழ்ப் பகுதியில் edit info என்பதைச் சொடுக்கி உங்களை பற்றிய அதாவது உங்கள் சகோதரத்தின் தகவல் மற்றும் பெற்றோரின் தகவல் என்பவற்றைச் சேகரித்து விடுங்கள். 

இவ்வாறு இருக்கும் பகுதியில் Invite என்பதை சொடுக்கி உங்கள் உறவினர்களுக்கு Mail அனுப்பிவிடுங்கள் அவர்கள் அதில் தமது குடும்பம் பற்றிய தகவலை சேர்த்து விட்டு அவர்களது உறவினருக்கு அனுப்புவார்கள். சில நாட்கள் கழித்து உங்கள் Family Tree ஐ நோக்கினால் அது ஆல விருட்சம் போல் வளர்ந்திருப்பதைக் காணக்கூடியதாக இருக்கும்.

" நிலம் எனும் Geni இல் உரம் எனும் Mail ஐ அனுப்பி Family மரத்தை வளர்ப்போம்.!!" 


புத்தாடை பற்றிய சிறிய தகவல்.

மனிதன் என்றால் ஆசைகள் இருப்பது வழக்கம் தான். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ருசி உண்டு. அநேகர் புது ஆடை அணிவதில் மிகவும் ருசி கண்டிருப்பார்கள் அவர்களுக்கு ஒரு சிறிய பயன் தரு செய்தி.


பணக்காரருக்கு எந்தநாளும் திருவிழா தானுங்க... எப்பவும் புதுசு புதுசா டிசைன் டிசைனா ஆடை அணிவாங்க. ஆனா ஏழைகளுக்கு திருவிழா நாள் மட்டும் தான் கொண்டாட்டம் அண்டைக்கு தான் புது ஆடை வாங்கி அணிவாங்க அதுவும் எவ்வளவோ கஷ்டப்பட்டு முதல் நாள் அங்காடில அடிபாடு நெரிசல் பட்டு. அப்படி வாங்கின உடுப்பை திருவிழா நாள் அன்றைக்கு உரையை ( pakking ) கழட்டிட்டு போடுவாங்க.

இவ்வாறு நீங்கள் அணியும் ஆடையை ஒரு தடவை தோய்த்து உலர்த்திவிட்டு அணியுங்கள் உங்களை அண்டைக்கு யாரும் நினைக்க மாட்டார்கள் அது தானுங்க தும்மல் வராது எண்டு மறை முகமாய் சொல்லுறன். நீங்க புது ஆடையை அவ்வாறே அணிகின்ற போது ஆடை நெய்யும் இடத்தில் இருந்த தூசி ( Dust ) மற்றும் ஆடை நெய்யும் துணியின் தூசி என்பன அவ்வாறே இருக்கும். புது ஆடையைத் தோயக்கிறதா என்று யோசித்தீர்கள் என்றால். பிறகு உங்களை யாராவது நினைக்க நேரிடும் அதனுடன் சேர்த்து வைத்தியச் செலவு ஆடையின் செலவை விட அதிகமாகிவிடும்.

முக்கிய குறிப்பு :-
தரம் குறைந்த ஆடைகளை வாங்கினா அப்படியே புதுசாய் போட்டிடுங்க நான் சொன்னதை எல்லாம் செய்தீங்க என்றால் ஆடையின் சாயம் போயிடும் அப்புறம் புத்தாடை பழைய ஆடை ஆகிடும். 

Thursday, 19 May 2011

சிறார் கனணி

உங்கள் வீட்டில் சில்வண்டுகள்(சிறுவர்கள் ) உள்ளனரா. அவர்கள் கனணிப் பிரியர்களாக இருந்தால் இந்தப் பகுதி உங்களுக்கும் அவர்களுக்கும் மிகவும் உதவும் என நம்புகிறேன்.

சிறுவர்களுக்குப் பிடித்த வகையில் உங்கள் கனணியை மாற்றிக் கொள்ள விரும்புகிறீர்களா இங்கே சொடுக்கவும். சொடுக்கிய பின்னர் மேற்க் கண்டவாறு ஒரு இணையத்தளம் open ஆகும்.அவ் இணையத்தளத்தில் Basic edition  MDSetupBasic .exe என்ற ஒன்று மேற்கண்ட படத்தில் நீல நிறத்தில் கட்டியவாறு காணப்படும் அதில் Start downloading என்ற பொத்தானை அழுத்தவும்.இவ்வாறான பகுதி ஒன்று உங்களிற்கு open ஆகும் அதில் Save file (lagre fil ) என்ற பொத்தானை அழுத்தவும் பின்னர் இப் File ஆனது உங்கள் கனணியில் User பகுதியில் உள்ள Download என்ற பகுதியில் Save ஆகும்.


File ஆனது Save ஆகி முடிந்ததும் உங்கள் download பகுதிக்கு சென்று MDSetupBasic .exe என்ற சொடுக்கியை சொடுக்கவும் அதன் பிறகு தொடர்ந்து வரும் box இல் cotinue என்ற பொத்தானை சொடுக்கவும் சொடுக்கியதும் கிழ்கண்டவாறு காணப்படும் அதில் OK என்ற பொத்தானை அழுத்தவும்.பின்னர் உங்கள் கணனியின் deksktop இல் இதற்க்கான ICAN save ஆகி இருக்கும் அதனை சொடுக்கவும்.

இவ்வாறன Desktop இற்கு மாற்றம் அளிக்கும்.
இவ் Desktop ஐ சிறுவர் பாவனைக்கு கொடுக்கும் போது அவர்கள் கனணியை மிக விருப்போடு தமது தேவைக்கேற்றவாறு உபயோகம் செய்வார்கள்.

மீண்டும் பெரியவர்களின் பாவனைக்குரிய Desktop இற்கு மாற்றுவதற்கு கிழ்க் காணும் படத்தில் உள்ளவாறு சிவப்பு பொத்தானை சொடுக்கி உபயோகிக்கவும்.

இப்பகுதி உங்கள் சிறார்களுக்கு மிகவும் உபயோகம் அளிக்கும் என்று நம்புகின்றேன்..

Tuesday, 10 May 2011

பழமை
உலகிலே முதன் முதலாக வெளி வந்த ஒலி அற்ற நிகழ்ப்படம்(வீடியோ)  இது 1885 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது. இதன் நீளம் ௦.42 செக்கன்கள். இவ் நிகழ்படமானது ஒரு தொழிற்ச்சாலையில் இருந்து வெளியேறும் தொழிலாளர்களை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இவ் நிகழ்படம் வெளிவந்த பொழுது அக்கால கட்டத்தில் வாழ்ந்த மக்கள் இதை ஒரு மிகப் பெரிய அதிசயமாகவே கருதினார்கள். இக் காலப் பகுதியிலே தான் சார்லஸ் சாப்ளின் Charles Chaplin இன் ஒலியன்றி உருவாக்கப்பட்ட நகைசுவை நிகழ்படங்கள் வெளியானது. அவை மிக வெற்றியடைந்த இவ்வுலகில் எல்லோராலும் அறியப்பட்ட நிகழ்படங்களாகவும் அமைந்திருந்தன என்பது குறிப்பிடத் தக்கது. முக்கியமாக இவ் நிகழ் படங்கள் கருப்பு வெள்ளை நிகழ்படமாகவே எடுக்கப்பட்டு வந்தன. இதன் பின்னர் 1927 ஆம் ஆண்டு ஒலியுடன் கூடிய முதலாவது நிகழ்படம் எடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 1930 ஆம் ஆண்டு நிற நிகழ்படம் உருவாக்கப்பட்டது.

Sunday, 17 April 2011

எதையும் ப்ளான் பண்ணி செய்யணும்...........

உங்கள் விட்டிற்கு அத்திவாரம் ஒன்றை போடுங்க... வீடு கட்டி முடிந்திடும்....


http://www.homestyler.com/designprofile/3c8e539b-d19c-40d0-bd94-027c7488aeeb
எனது வீட்டின் வரைபடம்... இதுபோல் நீங்களும் உங்கள் வீட்டினை அல்லது கற்பனை வீட்டினை வரைய இந்த இணையத் தளத்திற்கு செல்லவும்...

இங்கு நீங்கள் உங்களை ஒரு அங்கத்தவாராகப் பதிவு செய்துகொண்டு உங்கள் வரைபடத்தை வரையுங்கள்...

Wednesday, 13 April 2011

ஆய கலைகள் அறுபத்தி நான்கு

1. அக்கர இலக்கணம்
2. லிகிதம் (இலிகிதம்)
3. கணிதம்
4. வேதம்
5. புராணம்
6. வியாகரணம்
7. நீதி சாஸ்திரம்
8. சோதிடம்
9. தரும சாஸ்திரம்
10. யோகம்
11. மந்திரம்
12. சகுனம்
13. சிற்பம்
14. வைத்தியம்
15. உருவ சாஸ்திரம்
16. இதிகாசம்
17. காவியம்
18. அலங்காரம்
19. மதுர பாடனம்
20. நாடகம்
21. நிருத்தம்
22. சத்த பிரமம்
23. வீணை
24. வேனு
25. மிருதங்கம்
26. தாளம்
27. அகத்திர பரீட்சை
28. கனக பரீட்சை
29. இரத பரீட்சை
30. கஜ பரீட்சை
31. அசுவ பரீட்சை
32. இரத்தின பரீட்சை
33. பூ பரீட்சை
34. சங்கிராம இலக்கணம்
35. மல்யுத்தம்
36. ஆகர்ஷணம்
37. உச்சாடணம்
38. வித்து வேஷணம்
39. மதன சாஸ்திரம்
40. மோகனம்
41. வசீகரணம்
42. இரசவாதம்
43. காந்தர்வ விவாதம்
44. பைபீல வாதம்
45. தாது வாதம்
46. கெளுத்துக வாதம்
47. காருடம்
48. நட்டம்
49. முட்டி
50. ஆகாய பிரவேசம்
51. ஆகாய கமனம்
52. பரகாயப் பிரவேசம்
53. அதிரிச்யம்
54. இந்திர ஜாலம்
55. மகேந்திர ஜாலம்
56. அக்னி ஸ்தம்பம்
57. ஜல ஸ்தம்பம்
58. வாயு ஸ்தம்பம்
59. திட்டி ஸ்தம்பம்
60. வாக்கு ஸ்தம்பம்
61. சுக்கில ஸ்தம்பம்
62. கன்ன ஸ்தம்பம்
63. கட்க ஸ்தம்பம்
64. அவத்தை பிரயோகம்

Sunday, 16 January 2011

முனிவரும் சிஷ்யனும் (தத்துவக் கதை )

ஒரு அழகிய கிராமத்தின் அருகே ஒரு காடு ஒன்று உள்ளது. அக் காட்டினுள் ஒரு அழகிய குடிசை ஒன்றை ஒரு தவ முனிவர் வடிவமைத்து அங்கு தவம் செய்து வந்தார். 


அச் சமயத்தில் ஒரு சிஷ்யன் குருவிற்க்கு உதவி செய்வதாக குறி அவரிடம் சேர்ந்தான். ஒரு சில நாட்க்களின் பின்பு குருவிற்க்கு புரிந்தது இவன் எதோ ஒரு தேவைக்காகத்தான் வந்திருக்கிறான். அதை மனதில் வைத்து கொண்டு கேட்க்கத் தயங்குகிறான் என்று. 


முனிவர் ஒரு நாள் அச் சிஷ்யனை கூப்பிட்டு கேட்டார் உனக்கு என்ன வேணும்
 என்று? அப்பொழுது ஆரம்பிக்கிறான் சிஷ்யன் தான் வந்த காரணத்தை சொல்ல : முனிவரே உங்களிடம் நிறைய சக்தி இருக்கிறது எம்மால் முடியாத பலவற்றை நீங்கள் நிகழ்த்துகிறீர்கள். இந்த சக்தி எவ்வாறு உங்களுக்கு கிடைத்தது என்று வினவி முடித்தான். முனிவர் சொன்னார் இதற்க்கு தவம் செய்ய வேண்டு என்று. அப்பொழுது சிஷ்யன் எனக்கு அதை சொல்லி தர முடியுமா? எனக் கேட்டான். முனிவர் சிஷ்யனிடம் தவம் செய்யும் போது உச்சரிக்க வேண்டிய மந்திரத்தை சொன்னார். மந்திரம் சொல்லி முடித்த பின் முனிவர் ஒரு நிபந்தனை விதித்தார். நீ இந்த மந்திரத்தை உச்சரிக்கும் போது குரங்கை மட்டும் நினைக்கக் கூடாது என்று. அச் சிஷ்யனும் சரி என்று கூறி விட்டு அச்சிரமத்தை விட்டு வெளியே வந்தான் அப்பொழுது அவனுக்கு முன்னால் குரங்குகள் மட்டுமே கண்ணில் தென்பட்டது. சரி விட்டுக்கு போவோம் என்று அங்கே போனாலும் குரங்கு தான் அவனுக்கு தென்பட்டது. பின்னர் குளிக்க சென்ற போது சாப்பிட சென்றபோது எல்லாம் அவனுக்கு குரங்கு மட்டுமே தென்பட்டது. சரி மந்திரத்தை சொல்லுவம் என்று சுவாமி அறையினுள் சென்றால் அங்கேயும் இரண்டு குரங்குகள் பூஜை செய்து கொண்டிருந்தன. அவனுக்கு ஒரே குழப்பம் அத்தோடு அவன் சொல்ல வேண்டிய மந்திரத்தையும் மறந்து விட்டான். அடுத்தநாள் அதிகாலையில் முனிவரின் அச்சிரமத்திற்கு சென்றான். முனிவரை அழைத்து முனிவரே எனக்கு எந்த சக்த்தியும் வேண்டாம். எதுவும் வேண்டாம் என்னை இந்தக் குரங்குகளிடம் இருந்து காப்பாறினால் போது என்று கூறினான். முனிவர் அவனை அதிலிருந்து காப்பாற்றி அனுப்பினார். 


மனிதனின் மனமானது எதை நினைக்க வேண்டாம் என்று சொல்கிறோமோ அதைத்தான் எந் நேரமும் நினைத்துக் கொண்டிருக்கும். 

Saturday, 8 January 2011

காகமும் வெண்ணைக்கட்டியும் நரியும் .....

கிழே உள்ள படத்தை பார்த்த உடனே நீங்களே ஒரு கதையை கற்பனை செய்திருப்பீர்கள். நான் எனக்கு தோன்றிய படி கதை எழுதியுள்ளேன். முடிந்தால் அதையும் வாசித்து உங்கள் கற்பனையுடன் பொருந்துகிறதா என்று ஒரு முறை பார்த்து விடுங்களேன். 

என்னா ஒரு மூளை இந்த நரிக்கு. பேசாம நாம கொஞ்ச மூளையைக் கடன் வாங்கலாம் போல....
சின்ன வயதில பாட்டி வடை சுட்ட கதையை அம்மா மூலமோ , ஆசிரியர் மூலமோ அல்லது வீட்டில் இருக்கும் முதியவர் மூலமோ கேட்டிருப்பம் பல தடவை. ஆனால் இந்த கதை கேட்டிருக்க மாட்டோம். 

ஒரு காகம் தன் பசியைத் தீர்ப்பதற்காக எங்கோ ஓர் வீட்டில் இருந்து வெண்ணைக் கட்டியை (சீஸ்) தூக்கிக் கொண்டு வந்தது அப்போது அந்த காகத்திற்கு களைப்பு ஏற்ப்பட்டது அதனால் ஒரு மரத்தின் கிளையில் இளைப்பாறுவதற்காக இருந்தது. அந்த இடத்திற்கு நரி ஒன்று வந்தது. அதற்க்கோ சரியான பசி. அப்போது நரி காகத்திடம் வெண்ணெய்க்கட்டி இருந்ததைக் கண்டது. சிறிது நேரம் யோசித்திவிட்டு காகம் இருந்த கிளையின் அடியில் விறகுகளை அடுக்கி அதில் நெருப்பினைக் கொளுத்தி விட்டது. நரியின் தந்திரம் அறியாத காகம் அக்கிளையிளிருந்து இளைப்பாறியது. சிறிது நேரம் கழித்து தீயின் வெப்பத்தினால் அவ் வெண்ணெய்க்கட்டி  உருகத் தொடங்கியது. வெண்ணெய்க்கட்டி ஈந்த படி கிழ் நோக்கி வர அதனை தந்திரம் மிக்க நரி உண்டது. காகம் தன் உணவு பறி போய் விட்டதே என்று மனவருத்தத்துடனும் ஏமாற்றத்துடனும் அங்கிருந்து பறந்து சென்றது. 


"வாழ்கையில் ஏமாற்றங்கள் வருவது சகயமே. அதற்காக எல்லா சந்தர்ப்பத்திலும் ஏமாந்து விடாதீர்கள் அது போல் அடுத்தவனை ஏமாற்றாதீர்கள்" இல்லாவிடின்  வாழ்க்கையில் வெற்றுப் பகுதியே மிஞ்சி விடும்.

Sunday, 2 January 2011

சிறிய உரையாடல்...

ஒரு சிறிய பையனும் அவனது தந்தையும் வெளியே சென்றனர் அப்பொழுது அங்கே அவர்கள் சன நெரிசலான பாதை ஒன்றைக் கடக்க முற்ப்பட்டார்கள். அந்த சமயம் தந்தைக்கும் மகனுக்கும் இடையில் ஏற்ப்பட்ட ஒரு சிறிய உரையாடல் உங்களுக்காக.

தந்தை :- மகனே என் கையை இறுக்கி பிடித்துக்கொள் நாம் இந்தப் பாலம் 
                  கடக்கும் வரை.
மகன் :- இல்லை, நீங்கள் எனது கையைப் பிடியுங்கள்.

தந்தை :- நீ என் கையைப் பிடிப்பதற்கும் நான் உன்கையைப் பிடிப்பதற்கும்
                  என்ன வேறுபாடு?

மகன் :- நான் உங்கள் கையை பிடிக்கும் பொது சில சமயம் கையை விட்டு
                விடலாம் அது சில நேரங்களில் கஷ்டமாகிவிடும். ஆனால் நீங்கள் என் 
                கையைப் பிடித்தால்பாலம் கடக்கும் வரை விட மாட்டீர்கள். இது தான்  
                வேறு பாடு தந்தையே. ( என்று விளக்கம் கொடுத்தான் அந்தச் சின்னப் 
                 பையன்.)


இச் சிறிய உரையாடல் நகைச்சுவையாகத்தான் இருக்கின்றது ஆனால் கூறும் விடயம் உண்மையானதாகவும் மிகப் பெரிய ஒரு உள்ளானத கருத்தைக் கொண்டதாகவும் அமைகின்றது. எனவே நண்பர்களே நகைச்சுவையாக வாசியுங்கள் அத்துடன் அதில் புதைந்துள்ள கருத்தையும் புரிந்து நடவுங்கள்..