Sunday 21 November 2010

பாண் பரோட்டா (பாண் கொத்து)


என்ன விடியவில ஒவ்வொரு நாளும் பாண் சாப்பிட்டு சாப்பிட்டு அலுத்து போய்ட்டாங்க. மாட்டுக்கு எந்தநாளும் வைக்கல் மாதிரி மனுசனுக்கும் இப்ப பாண் ஆகிட்டு என்ன?. என்ன செய்யிறது அப்படியான வாழ்க்கை. சரிங்க கணக்க பேசலைங்க இப்ப பாண் பரோட்டா எப்படி செய்யிறது என்ன என்ன தேவை எண்டு பாப்போம்.

தேவையான பொருட்கள்

வெங்காயம்:
-
சிறிதளவு சிறுதுண்டுகளாக வெட்டப்பட்ட( பெரிய வெங்காயம் என்றால்
அதில் 1 /2 பகுதி போதுமானது)

பாண்:-
(வெள்ளைப்பாண் சிறந்தது ) உங்களுக்கு தேவையான அளவு ( சிறுதுண்டுகளாக வெட்டப்பட்ட அல்லது பிக்கப்பட்ட)

மஞ்சள் தூள் :-
சிரிதளவு

எண்ணெய்:-
தேவையான அளவு ( நல்லெண்ணெய் மிகச்சிறந்தது)

மிளகாய் / செத்தல் மிளகாய் :-
2 அல்லது 3 ( சிறுதுண்டுகளாக நறுக்கப்பட்டது)

சின்ன கடுகு:-
கொஞ்சம்

உப்பு:- தேவையான அளவு உறைப்பாக இருக்க வேண்டுமானால் கொஞ்ச மிளகாய்த் தூள் ஐயும் சேர்த்து கொள்ளவும்...
செய் முறை:-

ஒரு கடாயில்(சட்டியில்) சிறிதளவு எண்ணெய் ஊற்றி கொதிக்க வைக்கவும் (பிறகு கொதித்திட்டா என்று பாக்க கையை வைத்து பார்கிறேல). அதனுள் துண்டு துண்டாக வெட்டிய வெங்காயம் , ஒரு நிமிடத்தின் பின் மிளகாய் சின்னக்கடுகு என்பவற்றை வதக்கி வெங்காயம் பொன்னிறம் ஆகும் வரை வதக்கவும்... (ஆஆ பொன்னிறம் எண்டால் பக்கத்தில மோதிரத்தை அல்லது கழுத்து பட்டியை (சையினை) கொண்டுவந்து வைத்திட்டு பார்த்துகிட்டிருக்கிறேலங்க.. ) வதக்கும் பொது சிறிதளவு உப்பை சேர்க்கவும்.

அடுத்து மஞ்சள் தூள் சேர்க்கவும் பின்னர் அந்தக் கடாயினுள் வெட்டிய பாண் துண்டை சேர்த்து பிரட்டவும் அல்லது வதக்கிய வெங்காயம் மிளகாயுடன் சேர்த்து கலக்கவும் .. (கலக்கும் போதே ஒரு கொஞ்சத்தை கையில போட்டு டேஸ்ட் பார்திடுற பழக்கம் உங்களுக்கு இருக்கு தானே அப்ப என்ன யோசனை ஒரு கை பாத்திடுங்க... சாரிங்க ஒரு கரண்டி பாத்திடுங்க..) கொஞ்சநேரம் கழித்து அடுப்பினை நிறுத்தி விடுங்க .... (கொஞ்சம் நில்லுங்க என்னோட அடுப்பில எதோ கருகிற வாசம் வருது... இல்லைங்க அது என்னுடையதில் இருந்து இல்ல உங்க அடுப்பில இருந்து தாங்க.. ...) அடுப்பில் இருந்து இறக்கி சிறிது நேரம் கடாயில் அப்படியே விடுங்க அப்பொழுது தான் பாண் கொஞ்சம் வறண்ட நிலையை அடையும் டேஸ்ட் ஆகவும் இருக்கும்... இலஞ் சூட்டில பிள்ளைகளை கூபிட்டு சாப்பிட கொடுங்க...... பிடிச்சிருந்தா கிழமையில ஒரு நாள் செய்து கொடுங்க.. பாவம் தானே பிள்ளைகள்.... என்னங்க ஒரு 1௦ நிமிட வேலை தானே....

பாணை சிறுதுண்டாக பிக்க உங்க பிள்ளைகளிட்ட கொடுங்க கொஞ்சத்தை திண்டு திண்டு பித்து முடிப்பார்கள்....


முட்டையையும் சேர்த்து கொள்ளலாம் விருப்பம் என்றால்
(சின்னனாய் கொத்தி பாண் பரோட்டாவுடன் கலக்கவும்)
(ம.தினேஸ்)

என்ன உங்களுக்கும் உங்க பிள்ளைக்கும் இது பிடித்திருக்கா.....????