Saturday 8 January 2011

காகமும் வெண்ணைக்கட்டியும் நரியும் .....

கிழே உள்ள படத்தை பார்த்த உடனே நீங்களே ஒரு கதையை கற்பனை செய்திருப்பீர்கள். நான் எனக்கு தோன்றிய படி கதை எழுதியுள்ளேன். முடிந்தால் அதையும் வாசித்து உங்கள் கற்பனையுடன் பொருந்துகிறதா என்று ஒரு முறை பார்த்து விடுங்களேன். 

என்னா ஒரு மூளை இந்த நரிக்கு. பேசாம நாம கொஞ்ச மூளையைக் கடன் வாங்கலாம் போல....
சின்ன வயதில பாட்டி வடை சுட்ட கதையை அம்மா மூலமோ , ஆசிரியர் மூலமோ அல்லது வீட்டில் இருக்கும் முதியவர் மூலமோ கேட்டிருப்பம் பல தடவை. ஆனால் இந்த கதை கேட்டிருக்க மாட்டோம். 

ஒரு காகம் தன் பசியைத் தீர்ப்பதற்காக எங்கோ ஓர் வீட்டில் இருந்து வெண்ணைக் கட்டியை (சீஸ்) தூக்கிக் கொண்டு வந்தது அப்போது அந்த காகத்திற்கு களைப்பு ஏற்ப்பட்டது அதனால் ஒரு மரத்தின் கிளையில் இளைப்பாறுவதற்காக இருந்தது. அந்த இடத்திற்கு நரி ஒன்று வந்தது. அதற்க்கோ சரியான பசி. அப்போது நரி காகத்திடம் வெண்ணெய்க்கட்டி இருந்ததைக் கண்டது. சிறிது நேரம் யோசித்திவிட்டு காகம் இருந்த கிளையின் அடியில் விறகுகளை அடுக்கி அதில் நெருப்பினைக் கொளுத்தி விட்டது. நரியின் தந்திரம் அறியாத காகம் அக்கிளையிளிருந்து இளைப்பாறியது. சிறிது நேரம் கழித்து தீயின் வெப்பத்தினால் அவ் வெண்ணெய்க்கட்டி  உருகத் தொடங்கியது. வெண்ணெய்க்கட்டி ஈந்த படி கிழ் நோக்கி வர அதனை தந்திரம் மிக்க நரி உண்டது. காகம் தன் உணவு பறி போய் விட்டதே என்று மனவருத்தத்துடனும் ஏமாற்றத்துடனும் அங்கிருந்து பறந்து சென்றது. 


"வாழ்கையில் ஏமாற்றங்கள் வருவது சகயமே. அதற்காக எல்லா சந்தர்ப்பத்திலும் ஏமாந்து விடாதீர்கள் அது போல் அடுத்தவனை ஏமாற்றாதீர்கள்" இல்லாவிடின்  வாழ்க்கையில் வெற்றுப் பகுதியே மிஞ்சி விடும்.