Sunday, 16 January 2011

முனிவரும் சிஷ்யனும் (தத்துவக் கதை )

ஒரு அழகிய கிராமத்தின் அருகே ஒரு காடு ஒன்று உள்ளது. அக் காட்டினுள் ஒரு அழகிய குடிசை ஒன்றை ஒரு தவ முனிவர் வடிவமைத்து அங்கு தவம் செய்து வந்தார். 


அச் சமயத்தில் ஒரு சிஷ்யன் குருவிற்க்கு உதவி செய்வதாக குறி அவரிடம் சேர்ந்தான். ஒரு சில நாட்க்களின் பின்பு குருவிற்க்கு புரிந்தது இவன் எதோ ஒரு தேவைக்காகத்தான் வந்திருக்கிறான். அதை மனதில் வைத்து கொண்டு கேட்க்கத் தயங்குகிறான் என்று. 


முனிவர் ஒரு நாள் அச் சிஷ்யனை கூப்பிட்டு கேட்டார் உனக்கு என்ன வேணும்
 என்று? அப்பொழுது ஆரம்பிக்கிறான் சிஷ்யன் தான் வந்த காரணத்தை சொல்ல : முனிவரே உங்களிடம் நிறைய சக்தி இருக்கிறது எம்மால் முடியாத பலவற்றை நீங்கள் நிகழ்த்துகிறீர்கள். இந்த சக்தி எவ்வாறு உங்களுக்கு கிடைத்தது என்று வினவி முடித்தான். முனிவர் சொன்னார் இதற்க்கு தவம் செய்ய வேண்டு என்று. அப்பொழுது சிஷ்யன் எனக்கு அதை சொல்லி தர முடியுமா? எனக் கேட்டான். முனிவர் சிஷ்யனிடம் தவம் செய்யும் போது உச்சரிக்க வேண்டிய மந்திரத்தை சொன்னார். மந்திரம் சொல்லி முடித்த பின் முனிவர் ஒரு நிபந்தனை விதித்தார். நீ இந்த மந்திரத்தை உச்சரிக்கும் போது குரங்கை மட்டும் நினைக்கக் கூடாது என்று. அச் சிஷ்யனும் சரி என்று கூறி விட்டு அச்சிரமத்தை விட்டு வெளியே வந்தான் அப்பொழுது அவனுக்கு முன்னால் குரங்குகள் மட்டுமே கண்ணில் தென்பட்டது. சரி விட்டுக்கு போவோம் என்று அங்கே போனாலும் குரங்கு தான் அவனுக்கு தென்பட்டது. 



பின்னர் குளிக்க சென்ற போது சாப்பிட சென்றபோது எல்லாம் அவனுக்கு குரங்கு மட்டுமே தென்பட்டது. சரி மந்திரத்தை சொல்லுவம் என்று சுவாமி அறையினுள் சென்றால் அங்கேயும் இரண்டு குரங்குகள் பூஜை செய்து கொண்டிருந்தன. அவனுக்கு ஒரே குழப்பம் அத்தோடு அவன் சொல்ல வேண்டிய மந்திரத்தையும் மறந்து விட்டான். அடுத்தநாள் அதிகாலையில் முனிவரின் அச்சிரமத்திற்கு சென்றான். முனிவரை அழைத்து முனிவரே எனக்கு எந்த சக்த்தியும் வேண்டாம். எதுவும் வேண்டாம் என்னை இந்தக் குரங்குகளிடம் இருந்து காப்பாறினால் போது என்று கூறினான். முனிவர் அவனை அதிலிருந்து காப்பாற்றி அனுப்பினார். 


மனிதனின் மனமானது எதை நினைக்க வேண்டாம் என்று சொல்கிறோமோ அதைத்தான் எந் நேரமும் நினைத்துக் கொண்டிருக்கும். 

Saturday, 8 January 2011

காகமும் வெண்ணைக்கட்டியும் நரியும் .....

கிழே உள்ள படத்தை பார்த்த உடனே நீங்களே ஒரு கதையை கற்பனை செய்திருப்பீர்கள். நான் எனக்கு தோன்றிய படி கதை எழுதியுள்ளேன். முடிந்தால் அதையும் வாசித்து உங்கள் கற்பனையுடன் பொருந்துகிறதா என்று ஒரு முறை பார்த்து விடுங்களேன். 

என்னா ஒரு மூளை இந்த நரிக்கு. பேசாம நாம கொஞ்ச மூளையைக் கடன் வாங்கலாம் போல....
சின்ன வயதில பாட்டி வடை சுட்ட கதையை அம்மா மூலமோ , ஆசிரியர் மூலமோ அல்லது வீட்டில் இருக்கும் முதியவர் மூலமோ கேட்டிருப்பம் பல தடவை. ஆனால் இந்த கதை கேட்டிருக்க மாட்டோம். 

ஒரு காகம் தன் பசியைத் தீர்ப்பதற்காக எங்கோ ஓர் வீட்டில் இருந்து வெண்ணைக் கட்டியை (சீஸ்) தூக்கிக் கொண்டு வந்தது அப்போது அந்த காகத்திற்கு களைப்பு ஏற்ப்பட்டது அதனால் ஒரு மரத்தின் கிளையில் இளைப்பாறுவதற்காக இருந்தது. அந்த இடத்திற்கு நரி ஒன்று வந்தது. அதற்க்கோ சரியான பசி. அப்போது நரி காகத்திடம் வெண்ணெய்க்கட்டி இருந்ததைக் கண்டது. சிறிது நேரம் யோசித்திவிட்டு காகம் இருந்த கிளையின் அடியில் விறகுகளை அடுக்கி அதில் நெருப்பினைக் கொளுத்தி விட்டது. நரியின் தந்திரம் அறியாத காகம் அக்கிளையிளிருந்து இளைப்பாறியது. சிறிது நேரம் கழித்து தீயின் வெப்பத்தினால் அவ் வெண்ணெய்க்கட்டி  உருகத் தொடங்கியது. வெண்ணெய்க்கட்டி ஈந்த படி கிழ் நோக்கி வர அதனை தந்திரம் மிக்க நரி உண்டது. காகம் தன் உணவு பறி போய் விட்டதே என்று மனவருத்தத்துடனும் ஏமாற்றத்துடனும் அங்கிருந்து பறந்து சென்றது. 


"வாழ்கையில் ஏமாற்றங்கள் வருவது சகயமே. அதற்காக எல்லா சந்தர்ப்பத்திலும் ஏமாந்து விடாதீர்கள் அது போல் அடுத்தவனை ஏமாற்றாதீர்கள்" இல்லாவிடின்  வாழ்க்கையில் வெற்றுப் பகுதியே மிஞ்சி விடும்.

Sunday, 2 January 2011

சிறிய உரையாடல்...

ஒரு சிறிய பையனும் அவனது தந்தையும் வெளியே சென்றனர் அப்பொழுது அங்கே அவர்கள் சன நெரிசலான பாதை ஒன்றைக் கடக்க முற்ப்பட்டார்கள். அந்த சமயம் தந்தைக்கும் மகனுக்கும் இடையில் ஏற்ப்பட்ட ஒரு சிறிய உரையாடல் உங்களுக்காக.

தந்தை :- மகனே என் கையை இறுக்கி பிடித்துக்கொள் நாம் இந்தப் பாலம் 
                  கடக்கும் வரை.
மகன் :- இல்லை, நீங்கள் எனது கையைப் பிடியுங்கள்.

தந்தை :- நீ என் கையைப் பிடிப்பதற்கும் நான் உன்கையைப் பிடிப்பதற்கும்
                  என்ன வேறுபாடு?

மகன் :- நான் உங்கள் கையை பிடிக்கும் பொது சில சமயம் கையை விட்டு
                விடலாம் அது சில நேரங்களில் கஷ்டமாகிவிடும். ஆனால் நீங்கள் என் 
                கையைப் பிடித்தால்பாலம் கடக்கும் வரை விட மாட்டீர்கள். இது தான்  
                வேறு பாடு தந்தையே. ( என்று விளக்கம் கொடுத்தான் அந்தச் சின்னப் 
                 பையன்.)


இச் சிறிய உரையாடல் நகைச்சுவையாகத்தான் இருக்கின்றது ஆனால் கூறும் விடயம் உண்மையானதாகவும் மிகப் பெரிய ஒரு உள்ளானத கருத்தைக் கொண்டதாகவும் அமைகின்றது. எனவே நண்பர்களே நகைச்சுவையாக வாசியுங்கள் அத்துடன் அதில் புதைந்துள்ள கருத்தையும் புரிந்து நடவுங்கள்..