Tuesday, 9 November 2010

முகப் புத்தகத்தில் நான் பகிர்ந்து கொண்ட கருத்துக்கள்...

* நீ அன்பு காட்டுபவர்களுக்கு தேவையானதை செய்கிறாய் சுஜநலமாக ஏன் உன் மீது அன்பு காட்டுபவர்களுக்கு எதுவும் செய்கிறாய் இல்லை. இது தான் உனது பண்பா?

* புரியாத வார்த்தை இருந்தும் பயன் இல்லை, புரியாத வாழ்க்கை வாழ்ந்தும் பயன் இல்லை.

* சுதந்திரம் கிடைத்த பறவை போல் பறவடா இவ்வுலகெங்கும்
எல்லைகள் உனக்கில்லை நீ கூட்டில் அடைபடாதவரை....

* அழுது நீ கோழையாகாதே
உனக்கு நண்பன் நீயே
உன்னை காப்பற்ற வருபவர் எவர் உளர்
நீயே உன் காவலன்....


* உனது வாழ்க்கைக்கு எல்லை அமைத்து வாழ்
ஆனால் எல்லைக்குள் ஒரு போதும் வாழ்க்கையை அமைத்து விடாதே.

* இதுவரை ஆராய்ச்சிக்கு உட்ப்படுத்தாத ஒன்று எது தெரியுமா அன்பு. காரணம் அன்பென்றால் அகிலமும் அடங்கிவிடும் என்பதனால்.

*ஒருவனின் வார்த்தை தரும் வலியை விட அவன் செய்யும் செயலின் வலி அதிகம்.

* அன்பானவர்களிடம் உன் மனதை மறைத்து விடாதே. உன் மனதில் உள்ளதை மறைப்பதாயின் அன்பாய் இருப்பது போல் நடித்து வாழாதே.


* கற்பனையில் சித்திரத்தை வரைந்து விடலாம், ஆனால் ஒருவனின் மனதை புரிந்து கொள்ளாமல் நண்பன் ஆகி விட முடியாது.

* ஒரு மனிதனின் அதீத அன்பானது தாயிடம் மட்டுமே உள்ளது..

* ஒன்றை நாம் பார்க்கும் விதத்தில் அது சரி தப்பு என்று முடிவு எடுத்து விடுகிறோம். அதை நாம் எப்போது சரியா தவறா என்று ஆராய்ந்து பார்ப்பதில்லை அப்படி நாம் ஆராய்ந்து பார்த்து விட்டால் சந்தேகங்கள் மனிதர் இடையே தோன்றாது.


* ஆயிரம் தடவை உன் சந்தேகத்தை நேரே கேள் அது சிறிய கோபத்தை உருவாக்கும் ஆனால் பதில் கிடைத்து விடும், ஆனால் உன் சந்தேகத்தை நேரே கேட்க்காமல் உன்னுள் வைத்து மறை முகமாய் ஒருவனைக் காயப் படுத்தாதே அது உனக்கு எல்லையற்ற துன்பத்தை தந்துவிடும்...

* ஒருவனைப் புரிந்து கதைப்பவன் நல்ல நண்பன். புரியாமல் கதைப்பவனாக இருந்தால் அவன் உன் எதிரியல்ல அவனை மறுபடி சந்திக்க ஒரு தடவை கூட நினைத்து விடாதே.
* பிரிவின்றி எவரும் ஒன்றின் அருமையை உணருவதில்லை.
ஆசை கொண்ட எதையும் பிரியக் கூடாது.
பிரிந்தால் அதை எவரும் மறவர்.


* நான் என்று சொல்லும் போது எனது அகத்தில் இருப்பதையே கூறுகிறோம், எனது என்று சொல்லும் போது எனக்காக புறத்தில் இருப்பதை கூறுகிறோம். இதை எல்லாம் தாண்டி நாம் என்று கூறும் பொழுதே வெளியில் எமக்காக காத்திருக்கும் வாழ்க்கையைப் பெற்றுக் கொள்கிறோம்.

* மனிதனாய் பிறந்து மிருகத்தின் குணத்தைக் கொண்டிருப்பதை விட. மிருகமாய் பிறந்து அது தன் இனத்தின் மீது காட்டும் அன்பு போல் காட்டி வாழ்ந்து விடு மனிதா!

* நிஜங்கள் பலவற்றை கண்ணெதிரே தொலைத்து விட்டு இருளெனும் கனவில் தேடுகிறேன். நீண்ட நாட்க்களாக, பல மாதங்களாக, சில வருடங்களாக....

* கல்லைச் சலவை செய்யும் அருவியே இந்த மனிதனின் மனதையும் ஒரு முறை சலவை செய்து விட்டு செல்வாயா?.

* மனதில் பூக்கும் மல்லிகை பூ அன்பு. அதனைத் தூக்கி குப்பையில் போட்டால் கூட நறுமணம் வீசும்.

* ஆயிரம் தடவை யோசித்து முடிவெடுப்பதை விட எடுத்த முடிவில் நிரந்தாரமாய் இருப்பதே அழகு.நேரத்திற்கு தகுந்த மாதிரி செயற்ப்படாதே.

* திட்டமிடல் வாழ்கையில் அவசியாமாய் இருக்கிறது, ஆனால் திட்டமிட்டபடி வாழ்வு செல்லாவிடின் வெறுப்பு ஏற்படுகிறது. உங்கள் அத்தியாவசியத் தேவைக்கு திட்டமிடுங்கள் வாழ்க்கையை திட்டமிடாதீர்கள்.

* அன்பு என்பது சிறந்த ஒன்று அது அழிவதற்கு நீங்கள் காரணம் ஆகி விடாதீர்கள்...* புரியாத வாழ்க்கைப் பாதைகள்....... தொடரும் பயணங்கள் முடியும் இடம் தெரியாமல் தவிக்கும் உள்ளம்.......
* திறந்துதான் விடுங்களேன் சுதந்திரமாய் வாழட்டும் தவறு செய்யாமலேயே சிறை வாசத்தில் ஆயுட் கைதியாய் அடைபட்டுக் கிடக்கிறது பறவைகள்!!* அழுவதற்கு எனக்கு மனம் இல்லை காரணம் நான் அழுதால் என் தாய் அழுது விடுவாளே என்று..* உனக்கு அடுத்தவனை பிடிக்கவில்லையா ஒதுங்கிகொள். உன்னைப் பிடிக்கவில்லையா நீ தலை சிறந்தவன் என நிரூபித்து விடு. அதன் பின் அவர்கள் தாமே வருந்துவார்கள் உன்னை எண்ணி..*உறவுகள் பந்தம் என்னை உறுத்தவே செய்தது கண்டவை நிஜ உலகில் கசப்பான காட்சிகளே இதுவரை யாரும் என்னைப் புரியவில்லை எதுவரை இந்த சோகம் நீளுமோ தெரியவில்லை ஒன்று மட்டும் புரிந்தது இந்த உணர்வுகள் அற்ற சுயநல உறவுகளை ஏற்று உலக வாழ்க்கைக்கு நான் இன்னுமே பொருத்தமானவன் ஆகிவிடவில்லை என்று.* வானம் பூமியைத் தொட்டால் அது அதிசயம் ஆனால் மனிதன் வானத்தை தொட்டால் அது
சாதனை. அதிசயத்தை பார்த்துக் கொண்டிருப்பதை விட வானத்தை தொட முயற்சிப்பவனாக
இருந்தால் அதுவே உன் வாழ்வை வெற்றி பயணத்தில் தொடக்கி வைக்கும்...* எமக்கு நண்பர் பலர் உள்ளனர் ஆனால் கடவுளுக்கு நண்பர்கள் இல்லை.... காரணம் நாம் அனைவரும் பிள்ளைகளாக இருப்பதனால்.. நாம் கடவுளுக்கே நண்பன் ஆக வேண்டுமானால் நட்பில் உண்மையாக இருக்க வேண்டும்.* வாழ்க்கையில எவ்வளவு தான் உச்சிக்கு போனாலும் கடைசில ஒரு பெட்டிக்க தான் முடியும்.* படிப்பதற்காக எல்லா சந்தர்ப்பங்களையும்
இணைக்கத் தயாராக இருங்கள்.
எந்த சந்தர்ப்பத்திற்காகவும் படிப்பை
இழக்கத் தயாராகி விடாதீர்கள்!
எனில்
நீங்கள் எங்கிருந்து வந்தாலும்
எங்கு வேண்டுமானாலும் போகலாம்...* டிசம்பர் 31க்கும் ஜனவரி 1க்கும் ஒரு
நாள்தான் வித்தியாசம். ஆனால் ஜனவரி 1க்கும் டிசம்பர் 31க்கும் ஒரு வருஷம்
வித்தியாசம். இதுதான் உலகம்.* இன்பம் என்பது கானல் நீர் போன்றது ஒரு சில மணித்துளிகளுக்கு மட்டும் இருக்கும் ஆனால் துன்பம் என்பது வாழ்க்கையில் மரம் போன்று வளர்ந்தே செல்லும்...கானல் நீரைக் கண்டால் எம் மனதில் பூரிப்பு தோன்றும் அது போன்று கிடைக்கும் இன்பத்தை நீ வீணாக்காதே...வாழ்வில் துன்பம் வருவது சகஜமே...அதைக் கண்டு துவண்டு விடாதே பிறகு அது உன்னை வாழ விடாது.......( கானல் நீர் குளிர் நாடுகளில் தெரிவதில்லை காரணம் குளிர் நாடு என்பதால்.)* பொறுமை, விட்டு கொடுத்தல் இரண்டும் மிக முக்கியம் மனித வாழ்வில்... ஆனால் இவை இரண்டிற்கும் எல்லைகள் உண்டு.... அன்புக்கு மட்டும். என்றும் எல்லையும் இல்லை எதிரியும் இல்லை... மற்றவரின் பொறுமையை சோதிக்காதீர் அவ்வாறு சோதித்து பொறுமை இழந்தால் பிரச்சனை நமக்கு தான் அதிகம்..
* கலகலப்பாய் இருங்கள் வேண்டாம் என்று ஒரு போதும் உங்களுக்கு சொல்லவில்லை
ஆனால் மற்றவனை கலங்கப்படுத்தாது இருங்கள் ..அவ்வாறு இருப்பீர்கள் ஆனால்
நீங்கள் என்றுமே புன்னகை நிரம்பிய முகத்தோடு இருப்பீர்கள....* நாம் எப்போதும் மேலே போகும் விமானத்தை அண்ணார்ந்து பார்த்து கழுத்தை நோக வைப்பதை விட நேரே பார்த்து எமது முன்னேற்றத்தை பார்த்திருந்தால் என்றோ வாழ்க்கையில் முன்னேறியிருப்போம். இது மேல் அண்ணார்ந்து பார்க்கும் விமானத்துக்கு மட்டும் அல்ல அடுத்தவனை பார்த்து செய்வதற்கும் பொருந்தும்...* நல்ல நண்பன் உனக்கு வேண்டும் ஆனால் நீ நல்லவனாக இருந்தால் மட்டும் போதாது நீ உண்மையாகவும் இருக்கவேண்டும்..
( நீ உனது நண்பனை பற்றி கதைப்பதாக இருந்தால் அவன் உன்னருகே இருக்கும் போது கதை அவன் சென்ற பிறகு கதைக்காதே அவ்வாறு கதைப்பாயாக இருந்தால் நீ உனது நண்பனை இழந்து விடுவாய்)* நட்பின் இலக்கணம் தெரிய வேண்டுமானால் உங்கள் நட்பை நேசியுங்கள் அதன் இலக்கணம் மட்டுமல்லாது அதன் ஆழத்தையும் புரிந்து கொள்ளவீர்கள்.

* எதையும் தூரத்தில் இருந்து பார்த்து நம்பாதீர்கள்.........அங்கே என்ன
நடக்குது என்ன நடந்தது என்று தெரியாமல் கதைக்காதீர்கள்.............
இதுக்கு தான் சொல்வார்கள் காதால் கேட்பதும் பொய் கண்ணால் பார்ப்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய் என்று..

* கடன் கொடுங்கள் அதை திரும்பப் பெற்று விடுவீர்கள் ஆனால் களவு கொடுத்து விடாதீர்கள் அதை திரும்பப் பெற முடியாது...* கண்கள் எமது முதுகை பார்த்ததில்லை கால்த் தடங்கல் கூட மாறிப் பதிவதில்லை ஆனால் மனிதன் மட்டும் மாறுகிறான் காரணம் மட்டும் புரியவில்லை ஏனோ ..* நட்பு என்பது என்றும் அழியாச் சொத்து குடும்பம் என்பது பெரிய சொத்து ஆசிரியர் என்பது கிடைத்த சொத்து இச் சொத்துக்களை இழந்து விடக் கூடாது........
பிடிச்சிருந்தா சுட்டு போடுங்க பறுவாய் இல்ல....ஆனா சொல்லிட்டு சுடுங்க..... என்னங்க தத்துவம் சொல்லி இருக்குறன் உங்க கருத்தை எழுதிட்டு போங்களேன்....

4 comments:

 1. very good post

  Nellai P.Nadesan

  ReplyDelete
 2. Thank you so Much Friend..


  THALAVAADI(M.Thinesh)

  ReplyDelete
 3. மிகவும் அருமையாக உள்ளது தம்பி.....நான் சொல்லிடே சுடுறன் okya ?

  ReplyDelete
 4. மிக்க நன்றிகள்.... சொல்லிட்டிங்கல்ல அப்ப சுடுங்க........

  ReplyDelete