Wednesday, 8 June 2011

புத்தாடை பற்றிய சிறிய தகவல்.

மனிதன் என்றால் ஆசைகள் இருப்பது வழக்கம் தான். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ருசி உண்டு. அநேகர் புது ஆடை அணிவதில் மிகவும் ருசி கண்டிருப்பார்கள் அவர்களுக்கு ஒரு சிறிய பயன் தரு செய்தி.


பணக்காரருக்கு எந்தநாளும் திருவிழா தானுங்க... எப்பவும் புதுசு புதுசா டிசைன் டிசைனா ஆடை அணிவாங்க. ஆனா ஏழைகளுக்கு திருவிழா நாள் மட்டும் தான் கொண்டாட்டம் அண்டைக்கு தான் புது ஆடை வாங்கி அணிவாங்க அதுவும் எவ்வளவோ கஷ்டப்பட்டு முதல் நாள் அங்காடில அடிபாடு நெரிசல் பட்டு. அப்படி வாங்கின உடுப்பை திருவிழா நாள் அன்றைக்கு உரையை ( pakking ) கழட்டிட்டு போடுவாங்க.

இவ்வாறு நீங்கள் அணியும் ஆடையை ஒரு தடவை தோய்த்து உலர்த்திவிட்டு அணியுங்கள் உங்களை அண்டைக்கு யாரும் நினைக்க மாட்டார்கள் அது தானுங்க தும்மல் வராது எண்டு மறை முகமாய் சொல்லுறன். நீங்க புது ஆடையை அவ்வாறே அணிகின்ற போது ஆடை நெய்யும் இடத்தில் இருந்த தூசி ( Dust ) மற்றும் ஆடை நெய்யும் துணியின் தூசி என்பன அவ்வாறே இருக்கும். 



புது ஆடையைத் தோயக்கிறதா என்று யோசித்தீர்கள் என்றால். பிறகு உங்களை யாராவது நினைக்க நேரிடும் அதனுடன் சேர்த்து வைத்தியச் செலவு ஆடையின் செலவை விட அதிகமாகிவிடும்.

முக்கிய குறிப்பு :-
தரம் குறைந்த ஆடைகளை வாங்கினா அப்படியே புதுசாய் போட்டிடுங்க நான் சொன்னதை எல்லாம் செய்தீங்க என்றால் ஆடையின் சாயம் போயிடும் அப்புறம் புத்தாடை பழைய ஆடை ஆகிடும். 

2 comments:

  1. நிச்சயமாக அது மட்டுமல்ல தற்போது எல்லாக்கடைகளிலும் எல்லாமே காட்சிப்படுத்தப்பட்டிருப்பதால் எல்லோருமே தொட்டுப்பார்ப்பதர்க்கும் ஏன் அணிந்து பார்த்திருப்பார்த்திருக்கவும் கூடும் இதனூடாக பல்வேறுபட்ட நோய்க்கிருமிகள் குறிப்பாக தோல் நோய்க்கிருமிகள் பரவுவதற்கான சாத்தியம் அதிகம் ஆகவே புது ஆடையை கழுவி உலர்த்தி அணிவதே சிறந்தது.

    ReplyDelete
  2. தெளிவான கருத்திற்கு மிக்க நன்றிகள்!

    ReplyDelete