இவ் 2000 ரூபாத் தாளானது இலங்கை மத்திய வங்கியால் 2006 ஆம் ஆண்டு ஆடி மாதம் 3 ஆம் திகதி அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது. இது இன்று பாவனையில் உள்ள தாள். இதில் சிகிரியா என்னும் மலையின் புகைப்படம் முன் பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது அத்துடன் இத் தாளின் பின் பகுதியில் சிகிரியா ஓவியம் ஒன்றின் படமும் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
இம் ஐம்பது ரூபாத் தாளானது இலங்கை மத்திய வங்கியால் 2006 ஆம் ஆண்டு ஆடி மாதம் 3 ஆம் திகதி அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது. இத் தாள் இன்றும் பாவனையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இவ் இருபது ரூபாத் தாளானது 2005 ஆம் ஆண்டு ஆடி மாதம் 3 ஆம் திகதி இலங்கை மத்திய வங்கியால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது. இத் தாளின் முன்பகுதியில் கலை நிகழ்வுகளைக் குறிக்கும் வண்ணம் முகமூடியின் அமைப்புப் படமும் பின் பகுதியில் கடற்கரையில் மீன் பிடிக்கும் காட்சியும் பிரசுரிக்கப்பட்டுள்ளது. இத் தாள் இன்றும் பாவனையில் உள்ளது... இத்தாளில் ஒரு சிறப்பும் உண்டு தாளின் பின்புறத்தின் மேற்ப்பகுதியில் பாதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ள மீனின் வடிவமானது தாளினை மடிப்பதன் மூலம் மீனின் முழு வடிவத்தைப்பெற முடியும்.
இவ் 200 ரூபாத் தாளானது இலங்கை மத்திய வங்கியால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது. இத் தாள் இன்று பாவனையிலிருந்து நீக்கப்பட்டு வருகின்றது காரணம் இத் தாள் ஒருவகை பிளாஸ்டிக் பொருளாலானது அத்துடன் இத்தாலின் எழுத்துக்கள் கை படும் பொது அழிந்து போவதனால். இன்றைய காலகட்டத்தில் பாவனை வீதம் குறைக்கப்பட்டுள்ளது.
இப் 10 ரூபாத் தாளானது 1991 ஆம் ஆண்டு தைமாதம் 1 ஆம் திகதி இலங்கை மத்திய வங்கியால் ச்ச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது. இதன் முன் புறப் பகுதியில் வடிவமைக்கப்பட்ட சிங்கத்தின் படமும் அத்துடன் சந்திர வட்டக்கல்லும், இத்தாளின் பின்புறத்தில் பாராளுமன்றத்தின் படமும் அத்துடன் ஒரு கொக்கும் பூமரமும் சேர்த்து அச்சிடப்பட்டுள்ளது.
இம் ஐந்த்நூறு ரூபாத் தாளானது 2004 ஆம் ஆண்டு ஆடி மாதம் 1 ஆம் திகதி இலங்கை மத்திய வங்கியால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது. இத் தாளின் முன் புறத்தில் இரு மேளக் கலைஞ்ஞர்களினது படமும் ஒரு நடனக் கலைஞ்ஞரினது படமும் பின் புறத்தில் பௌத்த விகாரையும் அத்துடன் மினைக் கொத்திய வண்ணம் மீன் கொத்திப்பரவையும் ஒரு வகையான பூ மரத்தின் புகைப்படமும் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
இவ் ஒரு ரூபாத் தாளானது 1959 ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் 11 ஆம் திகதி இலங்கை அரசாங்கத்தினால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது. இதன் முன் பகுதியில் இலங்கை அரசாங்கத்தின் இலட்ச்ச்சனை அச்சிடப்பட்டுள்ளது. இதில் ஒரு ரூபாய் என்ற சொல் தவிர்ந்த ஏனைய அனைத்தும் சிங்கள மொழியிலே அச்சிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இவ் இரண்டு ரூபாய்த் தாளானது 1954 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 16 ஆம் திகதி இலங்கை மத்திய வங்கியால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.
இவ் இரண்டு ரூபாய்த் தாளானது 1959 ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் 11 ஆம் திகதி இலங்கை அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டது.
இவ் இரண்டு ரூபாய்த் தாளானது இலங்கை மத்திய வங்கியால் 1977 ஆம் ஆண்டு ஆனி மாதம் 26 ஆம் திகதி அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.
இம் ஐந்து ரூபாய்த் தாளானது 1952 ஆம் ஆண்டு ஆனி மாதம் 3 ஆம் திகதி இலங்கை மத்திய வங்கியால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.
இந் நூறு ரூபாய்த் தாளானது 2006 ஆம் ஆண்டு ஆடி மாதம் 3 ஆம் திகதி இலங்கை மத்திய வங்கியால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது. இத்தாள் இன்றும் பாவனையில் உள்ளது.
ஆண்டுக்காண்டு மாறு பட்ட நளினங்களில் அச்சிடப்பட்ட ஒரு ரூபாய், ஐந்துரூபாய், இரண்டு ரூபாய், மற்றும் பத்து ரூபாய்த் தாள்கள் சில....
No comments:
Post a Comment