Friday, 3 December 2010

பழைய புதிய இலங்கை நாணயத்தின் நளினங்கள்......

இந்த ஒரு ரூபாய்த் தாளானது 1952 ஆம் ஆண்டு ஆனி மாதம் 3 ஆம் திகதி இலங்கை மத்திய வங்கியால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது. இத்தாளின் முன்புறத்தின் மேற்ப் பகுதியில் "This note is issued behalf of the Government of Ceylon and is legal tender in Ceylon for the payment of any amount" என்று எழுதப்பட்ட வண்ணம் வெளியிடப்பட்டுள்ளது.
இவ் ஒரு ரூபா தாளானது இலங்கை அரசினால் 1949 ஆம் ஆண்டு பங்குனி மாதம் 1 ஆம் திகதி அச்சடித்து வெளியிடப்பட்டது. இதில் "THIS NOTE IS LEGAL TENDER FOR THE PAYMENT OF ANY AMOUNT" என்று முன் பகுதியில் எழுதப்பட்டுள்ளது.
இவ் இருபது ரூபாத் தாளானது 1989 ஆம் ஆண்டு மாசி மாதம் 21 ஆம் திகதி இலங்கை மத்திய வங்கியால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது. இத் தாளின் முன்பகுதியில் சந்திரவட்டக்கல்லும் பின்புறப் பகுதியில் பௌத்த விகாரையும் சேர்த்து அச்சிடப்பட்டுள்ளது.
இப் பத்துரூபா தாளானது 1985 ஆம் ஆண்டு தை மாதம் 1 ஆம் திகதி இலங்கை மத்திய வங்கியால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.
இத் தாளானது 1979 ஆம் ஆண்டு பங்குனி மாதம் 25 ஆம் திகதி இலங்கை மத்தியவங்கியால் இயற்க்கை காட்சியை அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்பட்டது. இத் தாள் இன்று பாவனையில் இல்லை.
இந்த நூறு ரூபாய்த் தாளானது 1974 ஆம் ஆண்டு ஆவணி மாதம் 27 ஆம் திகதி இலங்கை மத்தியவங்கியினால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது. இது இன்றைய காலகட்டத்தில் பாவனையில் இல்லை.


இப் பத்து ரூபாத் தாளானது 1985 ஆம் ஆண்டு 1 ஆம் திகதி தை மாதம் இலங்கை மத்தியவங்கியால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது. இதன் பின்புறப் பக்கத்தில் பௌத்த விகாரையின் படம் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
இவ் நூறு ரூபா தாளானது 1979 ஆம் ஆண்டு பங்குனி மாதம் இலங்கை மத்திய வங்கியால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது. இயற்க்கை காட்சியை உள்ளடக்கமாகக் கொண்டு அச்சிடப்பட்டுள்ளது அதாவது இரு குயில்கள், நரி, வண்ணாத்துப்பூச்சி ஒரு சிட்டுக்குருவி மற்றும் சில வகை மரங்களின் படங்களுடன் பதிவு செய்து வெளியிடப்பட்டது. இத் தாள் இன்று பாவனையில் இல்லை.

இவ் ஐம்பது ரூபாத் தாள் ஆனது 1982 ஆண்டு 1 ஆம் திகதி தை மாதம் இலங்கை மத்தியவங்கியால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது. இது இன்று பாவனயில் இல்லை.

இவ் இருபது ரூபாத் தாளானது 1982 ஆம் ஆண்டு 1 ஆம் திகதி தை மாதம் இலங்கை மத்திய வங்கியால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது. இத் தாளானது சந்திர வட்டக்கல் மற்றும் பௌத்த விகாரையை உள்ளடக்கமாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இது அரிதாகவே பாவனையில் உள்ளது..
இவ் ஐந்து ரூபாத் தாளானது 1982 ஆம் ஆண்டு 1 ஆம் திகதி தை மாதம் இலங்கை மத்திய வங்கியால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது. இதன் பின் புறபக்கத்தில் தூணில் வடிவமைக்கப்பட்ட கற் சிலையின் உருவம் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.



இவ் இரண்டு ரூபா தாளானது 1977 ஆம் ஆண்டு ஆவணி மாதம் 25 ஆம் திகதி இலங்கை மத்திய வங்கியால் அச்சடிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. இது இன்று பாவனையில் இல்லை.

இவ் இருபத்தைந்து சத தாளானது வைகாசி மாதம் இதில் திகதி 1947 ஆம் ஆண்டு படம் அரசாங்கத்தால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது. இது இன்று பாவனையில் இல்லை..

இப் பத்து சத தாளானது ஆடி மாதம் 14 ஆம் திகதி 1942 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்தால் அச்சிடப்பட்டு வெளியிடபட்டது.
இவ் 5 சதமானது ஆனி மாதம் 1 ஆம் திகதி 1942 இலங்கை ஆனது அச்சிட்டு வெளியிடப்பட்டது.

நாணயத்தின் நளினங்கள் அடுத்த பகுதியில் தொடரும்.......


என்ன பழைய தாள்களின் ஞாபகம் வருதாங்க....

எப்போதும் பழைய நினைவுகளுக்குப் பெறுமதி அதிகம்.... அதே போல் பழைய நாணயங்களுக்கும் பெறுமதி அதிகம்... அதைத் தவற விட்டிடாதீங்க........


உங்கள் கருத்தையும் வரைந்து விட்டு செல்லுங்கள்... எனது முயற்ச்சிக்கு......

4 comments: